June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி

1 min read

Minister Jayakumar defeated

2.5.2021

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் 19082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க.அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். ‘ஐட்ரீம்’ மூர்த்தி 49 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஜெயக்குமார் 30 ஆயிரத்து 61 வாக்குகளே பெற்றிருந்தார்.

டி.டி.வி. தினகரன்

கோவில்பட்டியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனம் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றிபெற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *