May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

திரிணாமுல் காங். வெற்றி; ஆனால் மம்தா தோல்வி

1 min read

won trinamul cong. but mumtha failed in west bangal

2.5.2021

மேற்கு வங்காளத்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

திரிணாமுல் காங். வெற்றி

மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கூட்டணி, இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணிகள் தேர்தலை சந்தித்தன.

திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவு என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில்வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்காளத்தில் தொடர்ந்து 3 முறையாக ஆட்சியமைக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் அக்கட்சி தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நந்து அதிகாரி வெற்றிபெற்றார்.
அவர் தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:-

நன்றி

நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம். அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தின் போது மம்தா பானர்ஜி காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு கேட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார். தற்போது அவர் தனது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் பேச வந்தபோது அவர் சற்கர நாற்காலி இல்லாமல் நடந்து வந்தார். இதன் மூலம் அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமாகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

பேட்டி

இன்று மாலை மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மிகப்பெரிய வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா பரவலை
கட்டுப்படுத்துவது தொடர்பாக நான் உடனடியாக பணிகளை தொடங்க உள்ளேன். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா ஆரவாரமின்றி சிறிய அளவில் நடைபெறும்.

கவலை வேண்டாம்

பாஜக தேர்தலில் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் மோசமான அரசியல் செய்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கொடூரங்களை நாம் சந்தித்தோம்.
நந்திகிராமை (மம்தா தோல்வி அடைந்த தொகுதி) பற்றி கவலைப்படவேண்டாம். ஒரு இயக்கத்தை எதிர்த்து நான் போராடியதால் நான் நந்திகிராமில் சிரமப்பட்டுள்ளேன். அது பற்றி கவலை இல்லை.

நந்திகிராம் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டோம். தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.