May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபைத் தேர்தலில் 3-வது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி

1 min read

We, the Tamil Party, are in 3rd place in the Tamil Nadu Assembly elections

2.5.2021-
தமிழக சட்டசபைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கடசி மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவியது.

சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கிறது. அ.தி.மு.க. அதற்கு அடுத்து அதிக தொகுதிகளை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெற்றிபெற்றுள்ளர்.

3-வது இடம்

சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிபெற வில்லை. சீமான் கூட திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழ்ந்தார்.
ஆனாலும் தமிழகத்தில் இந்த தேர்தலில் நாம்தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு இந்த நிலையில் முன்னேறி இருக்கிறார், சீமான். இதுதான் நிரந்தரமான உண்மையான வளர்ச்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த தேர்தலில்…

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 சதவீத வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15 சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது.

2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15 சதவீத வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9 சதவீத வாக்குகளை பெற்றது.
இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

இதன்படி சீமானின் நாம் தமிழர் கட்சி, பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திமுக, அதிமுக வேட்பாளர்களின் வாக்குகளுடன் ஒப்பிடும் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாக்கு குறைவுதான். ஆனால், அவர்தான் தற்போது மூன்றாம் இடம் பிடிக்கிறார். இதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.