June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் இன்றைய கொரோனா பதிவு சற்று குறைவு

1 min read

Today’s corona record in India is slightly lower

9.5.2021
இந்தியாவில் ஒரேநாளில் 4,03,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பதிவைவிட சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் தனது ஆவேச தாக்குதலை தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமானோரை தினமும் பாதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையைவிட சனிக்கிழமை பாதிப்பு சற்று குறைவாக உள்ளது.
கொரோனா பரவல் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நேற்று ஒரே நாளில் 4,092 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,86,444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 37,36,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 16,94,39,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியி்ட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.