June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

புதுவை முதல்மந்திரி ரங்கசாமிக்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Corona to New Delhi Chief Minister Rangasamy; Admitted to hospital

9/5/2021
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட உள்ளார்.

ரங்கசாமிக்கு கொரோனா

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க, மற்றும் அ,தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

கடந்த 7-ந் தேதி ரங்கசாமி முதல் மந்திரியாக பதவி ஏற்றார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து முதல்வராக ரெங்கசாமி பணியாற்ற தொடங்கினார்.

இதனிடையே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆஸ்பத்திரியில்

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *