கோமியம் குடிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. -கொரோனா வராது என்கிறார்
1 min read
Gomium-drinking BJP MLA -Corona says not coming
9/5/2021
உத்தரபிரதேச மாநில பாரதீயஜனதா எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் தான் கோமியம் குடிப்பதாகவும், இதனால் கொரோனா வராது என்றும் கூறுகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோமியம் குடிக்கும் எம்.எல்.ஏ.
உத்தரபிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவை சேர்ந்தவருமான சுரேந்தர் சிங், கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வரக்கூடிய நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கோமியம் குடிக்க முன்வர வேண்டும் என சுரேந்தர் சிங் வேண்டுகோள் விடுக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், அதனை எப்படி குடிக்க வேண்டும், எந்த நேரத்தில் குடிக்க வேண்டும், எப்படியெல்லாம் உடலுக்குள் அது செயல்படுகிறது உள்ளிட்ட விளக்கங்களும் அதில் கூறுகிறார்.
பாதிப்பு இல்லை
கொரோனா பாதிப்பு தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்றும், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முழு காரணம், கோமியம் குடிப்பது தான் எனவும் அந்த வீடியோவில் எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் கூறியுள்ளார்.