July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு மேலும் குறைந்தது; ஒரே நாளில் 3,11,170 பேர் பாதிப்பு

1 min read

Daily corona registration in India is further low; 3,11,170 people were affected in a single day

16/5/2021

இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு மேலும் குறைந்தது. நேற்று புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கொரோன தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பதிவு சற்று குறைந்து வருகிது.
இந்திய கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் அதாவது ஒரே நாளில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக உயர்வடைந்து உள்ளது.

4,077 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 4,077 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 3 லட்சத்து 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 07 லட்சத்து 95 ஆயிரத்து 335 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36,18,458 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 31 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 143 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும் 18,32,950 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.