May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் காலில் விழத் தயார்; மம்தா பானர்ஜி ஆவேசம்

1 min read

The Prime Minister is ready to fall on his feet; Mamta Banerjee is obsessed

29.5.2021
‛‛ என் காலில் விழுந்தால் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என்று பிரதமர் கூறியிருந்தால், அதனை செய்வதற்கு நான் தயார்” என்றும் என்னை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

மம்தா புறக்கணிப்பு

மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து, 15 நிமிடங்கள் விளக்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, அதன் பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார். இதற்கு மத்திய அரசும், பாரதீய ஜனதா தலைவர் நட்டா, மேற்கு வங்காள கவர்னர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இந்த விசயத்தில், எங்கள் தவறு என்ன என நீங்கள் தான் கூற வேண்டும். இந்த கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வழங்கி வருகிறது. மேற்கு வங்காளத்தில் மட்டும் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? எனது காலில் விழுந்தால் தான் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறினால், அதனை செய்ய நான் தயார். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

கோபத்தைக் காட்டுவது ஏன்?

மாநில விவகாரங்கள் தொடர்பான கூட்டங்களில், அதிகாரிகள் எப்போது பங்கேற்றார்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் அதுபோன்று நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்தும் தோல்வி அடைந்துள்ளீர்கள். எங்கள் மீது தினமும் கோபத்தை காட்டுவது ஏன்? வெள்ளச்சேதம் ஆய்வுக்கூட்டத்தில் கவர்னருக்கும், பாரதீய ஜனதா நிர்வாகிகளுக்கும் என்னவேலை?
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.