June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பள்ளத்துக்குள் மூழ்கிய கார்

1 min read

The car sank into the abyss

14.6.2021
மும்பையில் நின்றுக் கொண்டிருந்த கார் பள்ளத்துக்குள் மூழ்கி மறைந்தது. அந்த கார் மீட்கப்பட்டது.

பள்ளத்துக்குள் மறைந்த கார்

மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தால், சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்தார். அதில், திடீரென தோன்றியது சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே முற்றிலும் மறைந்து போனது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மீட்பு

பள்ளத்திற்குள் இருந்த மழைநீரில் மூழ்கிய கார், கிரேன் உதவியுடன் பல மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.