June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்

1 min read

O. Panneerselvam became the Deputy Leader of the Opposition

14.6.2021
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். மேலும் சசிகலாவுடன் போனில் பேசியதாக மாஜி அமைச்சர் ஆனந்தன், 15 பேர் கட்சியில் இருந்த நீக்கப்பட்டனர்.

துணைத் தலைவர் தேர்தல்

நடந்து முடிந்து சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆடசி அமைத்தது. அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொறடாவாக தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *