May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மிகைப்படுத்தி கூறி தேவையை விட டெல்லி 4 மடங்கு ஆக்சிஜன் பெற்றது; தணிக்கைக் குழு அறிக்கையி்ல் தகவல்

1 min read

Delhi received 4 times more oxygen than it needed to exaggerate; Information in the Audit Committee Report

25/6/2021

மிகைப்படுத்தி 4 மடங்கு ஆக்சிஜன் பெற்றதாக தகவல் வெளியான பிறகு கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காக போராடியது தான் நான் செய்த குற்றம் என டுவிட் செய்து உள்ளார்.

ஆக்சிஜன்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தேவையும், பற்றாக்குறையும் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக ஒன்றிய அரசை டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் சில மருத்துவமனைகள் உச்சநீதிமன்றம் நாடியதால் டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

4 மடங்கு

இந்த நிலையில் ஆக்சிஜன் தணிக்கைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டெல்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன.
ஏப்ரல் 25 முதல் மே 10 வரை டெல்லி அரசாங்கத்தால் ஆக்சிஜனுக்கான தேவை இந்தியாவின் இரண்டாவது அலைக்கு நடுவில் நான்கு மடங்காக மிகைப்படுத்தப்பட்டதாக கூறுகிறது.
டெல்லியால் கோரப்பட்ட அதிகப்படியான மருத்துவ ஆக்சிஜன் 12 மாநிலங்களில் இரண்டாவது கொரோனா தொற்று விநியோக நெருக்கடியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அந்த இடைக்கால அறிக்கையில் கூறியுள்ளது.

அதிக ஆக்சிஜன் நுகர்வு இருப்பதாகக் கூறி டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் – சிங்கால் மருத்துவமனை, அருணா ஆசிப் அலி மருத்துவமனை, இஎஸ்ஐசி மாதிரி மருத்துவமனை மற்றும் லைப்ரே மருத்துவமனை ஆகியவற்றை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

மக்களுக்காக போராட்டியது

இந்த குற்றச்சாட்டுக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு டுவீட்டில் பதிலளித்து உள்ளார். அவர் கூறி உள்ளதாவது:-

நான் 2 கோடி மக்களின் மூச்சுக்காக போராடியது நான் செய்த குற்றம் . நீங்கள் [பிரதமர் நரேந்திர மோடி] தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தபோது, நான் ஆக்சிஜனை ஏற்பாடு செய்ய போராடினேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உறவினர்களை இழந்துவிட்டார்கள். தயவுசெய்து பொய் சொல்லாதீர்கள், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்.
இவ்வாறு அவர்கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.