May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

23 மாவட்டங்கிளல் பஸ்போக்குவரத்து, சென்னை மண்டலத்தில் கோவில்கள் திறப்பு

1 min read

Opening of temples in 23 districts by bus transport and Chennai region

25.6.2021

தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து, சென்னை மண்டலத்தில் கோவில்கள் திறக்க அனுமதித்து ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினசரி குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.

பஸ் போக்குவரத்து

இதையடுத்து 23 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்

  • கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.
  • 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
  • 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

*சென்னை மண்டலமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கலட்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் நகை கடைகள் திறக்க அனுமதி

*இந்த 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி

  • 11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

*11 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

*23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.

23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

திருமணம்

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி
11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.