கோவாக்சின் தடுப்பூசி டெல்டா கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது; ஆய்வில் தகவல்
1 min read
The covax vaccine works best against delta corona; Information in the study
3/7/2021
கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்ததேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் (என்ஐஎச்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் (என்ஐஎச்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் பலன் அளிப்பதாக மூன்றாம் கட்டப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.