May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 43,733 பேருக்கு கொரோனா ;930 பேர் உயிரிழப்பு

1 min read

In India, another 43,733 people died of corona; 930 died

7/7/2021
இந்தியாவில் மேலும் 43,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 930 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 930 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 47,240 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 63 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 534- ஆக உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 920 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 04 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.