June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்திரிகள் 12 பேர் ராஜினாமா

1 min read

7 Union Ministers resign

7.7.2021
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வசதியாக மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுவதை அடுத்து, மத்திய அமைச்சர்கள் 12பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. மத்திய அமைச்சரவையில் தற்போது, 53 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

ராஜினாமா

இந்த மந்திரிசபை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மொத்தம் நேற்று 12 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.

இதில்

சிலருக்கு மீண்டும் மந்திரிசபையில் இடம் பெற

வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வேறு

இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பதவியை ராஜினாமா செய்த மந்திரிகள் வருமாறு:-

  1. சதானந்தா கவுடா

2.ரவி சங்கர் பிரசாத்

3.தாவர்சந்த் கெலாட்

4.ரமேஷ் பொக்ரியால்

5.ஹர்ஷ்வர்தன்

6.பிரகாஷ் ஜவடேகர்

7.சந்தோஷ் குமார் கங்வார்

8.பாபுல் சுப்ரியோ

9.தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்

10.ரத்தன் லால் கடாரியா

11.பிரதாப் சந்திர சாரங்கி

12.சுஷ்ரி தேபாஸ்ரீ சவுத்ரி

ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா

செய்துள்ளனர். இதனை ஜனாதிபதி ராம்நாத்

கோவிந்த் ஏற்று கொண்டதாக ஜனாதிபதி மாளிகை

அறிவித்து உள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *