தமிழக அரசின் நீட் ஆய்வு அதிகார வரம்பை மீறிய செயல்; ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
1 min read
Transgression of the NEET inspection jurisdiction of the State of Tamil Nadu; Federal Government Information in highCourt
8/7/2021
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு குழுவை நியமித்தது வரம்பை மீறிய செயல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட்- ஆராய குழு
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து பா.ஜ., மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கின் ஒருபகுதியாக மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. அதி்ல் கூறியிருப்பதாவது:-
வரம்பை மீறிய செயல்
நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை நியமித்து இருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது சமூக ரீதியில் பின் தங்கிய பிரிவினர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய மருத்துவ ஆணையத்துக்கு மட்டுமே உரிமை உண்டு.
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.