June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

“நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்” — மா.சுப்பிரமணியன் பேட்டி

1 min read
"Tamil Nadu students should be ready for the NEED exam" - Ma Subramanian
12.7.2021
 நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
 
நீட் தேர்வு

 மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நீட் வரும் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- 
 நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை. நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது. நீர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தவறில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தமிழக அரசு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *