May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

1 min read

Basavaraj toy elected Karnataka Chief Minister

27.7.2021
கர்நாடக மாநில பாரதீய ஜனதா சட்டசபை தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் அந்த மாநில முதல் மந்திரியாகிறார்.

எடியூரப்பா ராஜினாமா

224 எம்.எல்.ஏ.க்கள் உள்ள கர்நாடகா சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். இவரது ஆட்சி ஓராண்டு கூட நீடிக்கவில்லை.

2019ல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவியதைடுத்து முதல்வராக 76 வயது எடியூரப்பா தலைமையில், பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.
75 வயதான யாருக்கும் கட்சி அல்லது ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்ற பா.ஜ.க.வின் கொள்கை. ஆனால் எடியூரப்பாவுக்கு 2 ஆண்டுகள் முதல்வராக விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்;

புதிய முதல்வர்

இந் நிலையில், இன்று பா.ஜ.க. சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.. இதில் கர்நாடகா பா.ஜ. மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் அவர் கர்நாடக முதல்வராகிறார்.

எஸ்.ஆர்.பொம்மை மகன்

மறைந்த முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் தான் பசவராஜ் பொம்மை. இவருக்கு 61 வயது ஆகிறது. இவர் இதற்கு முன்னர் ஜனதா தள கட்சியில் இருந்தார். 2008-ல் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது கர்நாடகா உள்துறை அமைச்சராக உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.