May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சம்பளம், ஓய்வூதியத்தை 1-ந் தேதி முதல் விடுமுறை நாட்களிலும் பெறும் வசதி

1 min read

Facility to receive salary and pension from 1st day onwards

27.7.2021
சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை விடுமுறை நாட்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதி வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுபோலவே இஎம்ஐ போன்றவையும் வார இறுதி நாட்களில் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

வங்கிகளில் சம்பளம்

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வகைகப்படுகிறது. மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான மொத்த தொகை என்.ஏ.சி.எச் எனப்படும் தேசிய பணம் செலுத்தும் கார்பரேஷன் வழியாகவே வழங்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் அடுத்த வேலை நாட்களில் மட்டுமே கிளியரன்ஸ் வசதி தற்போது உள்ளது. இது அனைத்த நாட்களிலும்(சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும்) செயல்படும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏற்கெனவே அறிவித்தார். இந்த வசதி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.

அனைத்து நாட்களிலும்…

அதன்படி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனிமேல் வார வேலை நாட்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றங்கள் 2021ம் ஆண்டு ஆகஸ்டு 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இனி எல்லா நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சம்பளம் அல்லது ஓய்வூதிய சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.

சம்பளம் மட்டும் அல்லாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்றவற்றையும் குறிப்பிட்ட அந்த நாட்களில், வார இறுதி நாட்களாக இருந்தாலும் செலுத்த முடியும். பங்குகளுக்கான டிவிடெண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.