June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கு உதவுவதில் பெருமை; அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

1 min read

Proud to help India; US Secretary of State

28/7/2021
கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியதாகவும், தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் பெருமைக்கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிளிங்கன் பேசியதாவது:

பெருமை கொள்கிறது

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது.

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் தடுப்பூசி கூட்டாண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படும்.
நான் எனது குடும்பத்துடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளேன். இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான ஆர்வத்தை பகிர்ந்து கொள்கின்றன. ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய பங்களிப்பை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *