காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
1 min read2 terrorists shot dead in encounter in Kashmir
31.7.2021
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் நாக்பெரான்-டார்சர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த உளவு தகவலை அடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.
2 பேர் சுட்டுக்கொலை
இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இந்த என்கவுண்ட்டர் சரியாக தச்சிகாம் வனப்பகுதியில் நமீபியன் மற்றும் மார்சர் பகுதியில் நடந்துள்ளது என்று காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.