June 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா; 26 பேர் சாவு

1 min read

Corona for 1,986 people in Tamil Nadu today; 26 deaths

31.7.2021
தமிழகத்தில் இன்று 1,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 26 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,103 பேர் ஆண்கள், 883 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 2,178 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

கோவையில் இன்று 246 பேருக்கும், சென்னையில் 204 பேருக்கும், ஈரோட்டில் 165 பேருக்கும், தஞ்சாவூரில் 124 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்தார். தென்காசியில் இன்று 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.