பூனையிடம் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram trapped in the cat / comedy story by Thabasukumar
14.8.2021
பவுர்ணமி பூஜைக்கு சென்று திரும்பிய கண்ணாயிரம் மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் ஐம்பது ரூபாய் தருவதாக கூறி தாயத்தைவாங்கினார். அதை அந்த வாலிபர் கண்ணாயிரத்தின் இடுப்பில் கட்டிவிடுவதாக கூறினார். ஆனால் கண்ணாயிரம் வேண்டாம், வேண்டாம் வீட்டில் மனைவியிடம் காட்டிவிட்டு தாயத்தை கட்டிக்கொள்கிறேன் என்றுகூறினார். மோட்டார் சைக்கிள் வாலிபரும் சரி பத்திரம் என்றார்.
தாயத்தை கையில் வாங்கிய கண்ணாயிரம் அதில் முடிச்சுப்போட்டு தன் ஆள்காட்டிவிரலில் மாட்டி சுற்றினார்.
அதுவேகமாக சுற்றுகிறதாஎன்று பார்த்தார். அது வேகமாக சுற்றியது. கண்ணாயிரத்துக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. மேலும்வேகமாக சுற்றினார். அதை பார்த்த வாலிபர் அண்ண வேகமாக சுற்றாதீங்க. இருட்டில் போய் விழுந்திடும் என்றான். கண்ணாயிரம் கேட்கவில்லை. அடுத்து வேகமாக சுற்றும்போது தாயத்து கைவிரலில் இருந்து நழுவி இருட்டில் கீழேவிழுந்தது.
கண்ணாயிரம் திகைத்தார். மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் தம்பி கொஞ்சம் தேடிப்பாரப்பா.. கீழே இங்கதான் கிடக்கும்பார் என்றார். அந்த வாலிபர் ம்.. நான் மாட்டேன் என்றான். கண்ணாயிரத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் இருட்டில் தேடினார். அப்போது இரண்டு பூனைகள் மியாவ், மியாவ் என்று கத்திய படி அங்கு ஓடிவந்தன. கண்ணாயிரத்தின் தாயத்தின் ஒருமுனையை ஒரு பூனை கடித்து இழுத்தது. மற்றொரு முனையை இன்னொரு பூனை கடித்தது. அவை காட்டுப்பூனை என்பதால் ராட்சத உருவில் இருந்தன. இரண்டும் ஒன்றுக்கொன்று சண்டை போட்டன. கண்ணாயிரம் பரிதாபமாக அதை பார்த்தார். மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் தம்பி பூனையிடமிருந்து கொஞ்சம் தாயத்தை பறித்து கொடு என்றார்.
அந்த வாலிபர் ம்ஹும்… பூனை என்னை கடிச்சுடும். நான் மாட்டேன் என்று மறுத்தான்.
கண்ணாயிரம் என்ன செய்யலாம் என்று யோசித்தார். பூனை பயங்கரமாக சண்டை போட்டது. தாயத்து கடிபட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.
போச்சு. போச்சு என்று கண்ணாயிரம் கத்தினார். தன்கையிலிருந்த கறுப்பு கம்புளியால் பூனையை விரட்டினார். பூனைகள் தாயத்தை விட்டுவிட்டு கறுப்பு கம்புளியை பிடித்து இழுத்தன. கண்ணாயிரம் அங்கே இழுக்க, பூனைகள் மற்றொருமுனையை இன்னொரு பக்கம் இழுக்க ஒரே பரபரப்பானது.
கண்ணாயிரம் டேய் தம்பி தாயத்தை விட்டுட்டு கம்புளியை பூனைகள் கடிச்சுட்டு. இந்தா கம்பு இதை வச்சு பூனையை விரட்டுஎன்றார்.
அந்த வாலிபர் இரக்கப்பட்டு பூனைகளை கம்பால் தாக்கினார்.. உடனே பூனைகள் கம்பெனியை விட்டுவிட்டு அந்த வாலிபர் மீது பாய்ந்தது. அந்த வாலிபர் கம்பால் விரட்டிபார்த்தார் முடியவில்லை. கம்பை போட்டுவிட்டு வீட்டுக்கு ஓட்டம்பிடித்தார். பூனைகள் அவரை விரட்டி சென்றன. கண்ணாயிரம் கடித்து கிழிக்கப்பட்டதாயத்து மற்றும்கம்பளியை எடுத்துகொண்டுபின்னால்ஓடினார்.
பூனைகளும் விடாது துரத்தின. கண்ணாயிரம் ஓடிவருவதை பார்த்து பூனைகளும் தன்னை அவர் விரட்டிக்கொண்டுவருவதாக நினைத்து திடீரென்று நின்று எதிர்த்து பார்த்தன. கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. எங்கே தன்மீது பாய்ந்துவிடுமோ என்றபதட்டத்தில் இருந்தார்.
இந்த நேரத்தில் எலி ஒன்று குறுக்கே ஓடியது. அதை பார்த்ததும் இரண்டு பூனைகளும் அந்த எலியை மடக்கின. எலி ஒருபக்கம் பாய பூனைஅந்த பக்கம் பாய இரண்டுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்ணாயிரம் அங்கிருந்து வீட்டுக்கு தப்பிஓடினார். மோட்டார் சைக்கிள் வாலிபர் கறுப்புகம்புளியுடன் சென்றுவிட்டார். அதை காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
தமக்குரிய கம்பளி மற்றும் தாயத்துடன் வீட்டு கதவை தட்டினார். கதவு திறக்கவில்லை. அவருக்கு சந்தேகம் வந்தது. இருட்டில் இடம்தெரியாமல் வேறு வீட்டுகதவை தட்டிவிட்டோமோ என்றுபயந்தார். சொன்னமாதிரியே நடந்தது. அந்த வீட்டில் உள்ளவர் கையில் அரிவாளுடன் கதவைதிறந்தார். எவண்டா கதவை தட்டியது என்று கத்தினார். கண்ணாயிரம் இருட்டில் பதுங்கிகொண்டார். கதவை திறந்தார் சிறிது நேரம்கத்திவிட்டு எவனாவது கதவை தட்டினா கையைவெட்டியிருவேன் என்றுஎச்சரித்துவிட்டு கதவைபூட்டினார்.
கண்ணாயிரத்துக்கு தும்மல் வந்தது அடக்கிக்கொண்டார்.
கொஞ்சம் உஷாராக இல்லைஎன்றால் கையைவெட்டி இருப்பான். நல்லவேளை தப்பித்தேன் என்றுநினைத்தார்.
பஞ்சகல்யாணி போர்டு மாட்டியிருக்கும் வீடுதான் நம்மவீடு எப்படியும்கண்டுபிடிச்சிடலாம். இன்னைக்கு வேற கரண்டுஇல்லை என்ன செய்யிறது என்று தட்டுதடுமாறி விடுதியில் நடந்தார்
-வே. தபசுக்குமார். புதுவை