June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 32,937 பேருக்கு கொரோனா; 417 பேர் சாவு

1 min read

Corona for 32,937 newcomers in India; 417 deaths

16.8.2021
இந்தயாவில் மேலும் புதிததாக 32,937 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று 417 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியி்ட்ட கொரோனா பற்றிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 32,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரமாக பதிவானது.

ஒரே நாளில் 35,909 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.81 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 417 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,31,642 ஆனது.

தற்போது கொரோன பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.48 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 54.58 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 17,43,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில்…

இன்று காலை 11:00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 20 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 லட்சத்து 74 ஆயிரத்து 916 பேர் பலியாகினர். 18 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 626 பேர் மீண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *