June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஐ.நா. பொதுச்செயலர் வலியுறுத்தல்

1 min read

The people of Afghanistan must be protected; UN The Secretary-General insisted

16/8/2021

ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியதாவது:-

பாதுகாக்கப்பட வேண்டும்

ஆப்கானிஸ்தான் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆப்கனில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. இக்கட்டான நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *