June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

1 min read

Action to rescue Indians in Afghanistan

16/8/2021
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கண்காணித்து வருகிறோம்

ஆப்கானிஸ்தான் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளோம். அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *