June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

1 min read

Cooking gas cylinder price hiked by Rs 25

17.8.2021

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, ‘சிலிண்டர்’ விலை முதல் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50 விலையில் விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர், இன்று முதல் ரூ.875.50 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.1,756க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *