கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு; வெளிவேஷம் போடமாட்டோம்-விஜய் பேச்சு
1 min read
We have faith in God; we will not put on a facade Vijay’s speech.
30.9.2026
தாராபுரத்தில் வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று பிரசாரம் செய்தார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. வணக்கம்… வணக்கம்… கொங்கு நாட்டு தங்கங்களே… கொங்கு நாட்டு சிங்கங்களே… என் சொந்தங்களே.. இங்கு நான் முதல்-அமைச்சராக வரவில்லை; உங்கள் வீட்டு பிள்ளையாக… உறவாக.. மகனாக… தாய்மாமனாக வந்துள்ளேன். ஊழல் ஒழிப்பில் முனைப்போடு உள்ளோம். வாக்குறுதிகளிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
இன்னும் நாங்கள் தான் முதல்-அமைச்சர், நாம் தான் அதிகாரத்தில் இருக்கிறோம் என சிலர் நினைக்கின்றனர். இன்னும் நாங்கள் தான் மன்னராட்சி மனப்பான்மை எனக்கு இல்லை. தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி. தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளோம்.
கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு, யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்துமசுக்கும், பக்ரீத்துக்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம். மற்றவர்கள் போல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு பம்மிக் கொண்டு திமுக போல் இருக்க மாட்டோம். அண்ணா காலத்தில் எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்ததாக திமுகவின் துரைமுருகன் பேசுகிறார். துரைமுருகன் கூறியதுபோல் எளியவர்களை நிறுத்தி தான் மன்னர்களை தோற்கடித்தது தவெக.
கொளத்தூர் மக்களுக்கு கையெடுத்து கும்பிட்டு கோடான கோடி நன்றி எனக் கூறுகிறார் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் நிறைய தவறுகள் நடந்திருக்கிறது, அதனால் தான் கொளத்தூரில் ஓட்டு போடவில்லை. இனி ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் கோடான கோடி நன்றி எனக் கூறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார், நான் பாசமாக பேசுகிறேன். ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்திருக்கிறார் ஸ்டாலின், நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்தி பேசப் பேச தவெக உயர்ந்து கொண்டே இருக்கும்.
மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகக் கூறுபவர். தீர்ப்பை மதிக்க மாட்டாராம். பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக அதிமுக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஒன்று தான், இருவருக்கும் ஒரே ஒனர் தான். யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்?. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி.
எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை, ராஜினாமா செய்துவிட்டுதான் வந்தார். இதில் எந்த பேரமும் கிடையாது. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது?. திமுகவுக்கு முட்டு கொடுக்கிறது அதிமுக. திமுகவை எதிர்ப்பது தவெக மட்டும்தான். தீய சக்தி திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்.
திமுக, அதிமுகவின் பொய்களை நம்பாதீர்கள்.. எம்.ஜி.ஆர்.க்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?. கொங்கு மக்கள் எப்போதுமே உழைக்கும் மக்கள்.. எனவே தாராபுரம் மக்கள் அனைவரும் உங்கள் வெற்றி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.