தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க தடை; உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min readHigh Court bans opening of schools in Telangana
31.8.2021
தெலுங்கானாவில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம் மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பள்ளிக்கூடம்
கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்தபோதிலும், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து உள்ளதால், கல்வி நிலையங்கள் திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தடை
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நாளை (புதன் கிழமை ) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு இன்று தடை விதித்துள்ளனர்.
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி, புதிதாக 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.