10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வரின் துறை
1 min readChief’s department at question time after 10 years
31.8.2021
கடந்த 10 ஆண்டுகளாக கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கேள்வி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
முதல்வரின் துறைகள்
சென்னை கலைவாணர் அரங்கில், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களால் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பதி்ல்
இதையடுத்து, இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக பா.ம.க. எம்.எல்.ஏ., மணியின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டசபையில் உறுதி அளித்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழக சட்டசபையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தின் போது தனது துறை சார்ந்த கேள்வி ஒன்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.