தமிழ்நாடு ரெயில்வே திட்டங்கள் பற்றி ரெயில்வே மந்திரியுடன் எல்.முருகன் சந்திப்பு
1 min read
L. Murugan meets Railway Minister on Tamil Nadu Railway projects
7.9.2021
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய ரெயில் பாதை குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் ரெயில்வே மந்திரியுடன் சந்தித்துப் பேசினார்.
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவை இன்று சந்தித்துப் பேசினார்.
மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு பயணிகள் விரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்றும் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப்பாதையோடு இணைக்க உதவும். இது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்.
ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் ரெயில்வே துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.