May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு

1 min read

Chennai IIT selected as the best educational institution in India

9.9.2021

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

உயர்கல்வி

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதற்கான உருவாக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்), மாணவா்கள் தோச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்காக சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

இதன்படி பொதுப்பிரிவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐஐஎஸ்சி பெங்களுரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

ஆய்வுப்பிரிவு:

முதலிடம் – ஐஐஎஸ்சி பெங்களுரு, 2-ஆம் இடம் – சென்னை ஐஐடி, 3 -ஆம் இடம் – ஐஐடி மும்பை

சிறந்த மருத்துவக்கல்லூரி பிரிவு:

முதலிடம் – டெல்லி எய்ம்ஸ், 2-ஆம் இடம் – சண்டிகர் PGIMER, 3 -ஆம் இடம் – வேலூர் சிஎம்சி

சிறந்த கல்லூரி பிரிவு:

முதலிடம் – டெல்லி மிரண்டா ஹவுஸ் கல்லூரி, இரண்டாமிடம் – டெல்லி எல்.எஸ்.ஆர். பெண்கள் கல்லூரி, 3-ஆம் இடம் – சென்னை லயோலா கல்லூரி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.