காபூலில் பத்திரிகை யாளர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை
1 min read
Naked and tortured journalists in Kabul
9.9.2021
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ‘மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்’ என, உறுதி அளித்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி உள்ளது.
தலிபான்கள் பத்திரிகையாளர்களை தாக்கிய இரண்டு புகைப்படங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் மார்கஸ் யாம், ஆப்கன் செய்தி நிறுவனம் ஆகியோர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளனர். அதில், இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்கவைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களான தகி தர்யாபி மற்றும் நெமத்துல்லா நக்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘மேற்கு காபூல் கார்ட்-இ-சார் பகுதியில் வீடியோ எடிட்டர், செய்தியாளர் ஆகியோர் பெண்கள் போராட்டம் குறித்த செய்தியை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி சென்று அறையில் அடைத்து தாக்கி, கொடுமைப்படுத்தி உள்ளனர்’ என, எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.