May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சிகம்

1 min read

Rs 15 crore museum in Nellai

9.9.2021

நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில், நவீன வசதிகளுடன் ”பொருநை” அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. அங்கு 4ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டு உள்ளது. கீழடி நாகரீகம் 6ம் நூற்றாண்டு நாகரீகம் என தெரியவந்துள்ளது. அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அகழாய்வு நடக்கும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது.

கொற்கை துறைமுகம் கி.மு.6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் ”பொருநை” தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொருநை ஆற்றங்கறை நாகரீகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.

கேரள மாநிலம் பட்டணம் ஆந்திரா வேங்கி, ஒடிசாவின் பாலூர், கர்நாடகாவில் தலைக்காடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஆய்வு செய்வோம். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேஷியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் துவங்கி எழுத வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நின்று நிறுவுவதே இந்த அரசின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.