May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 43,263 பேருக்கு கொரோனா

1 min read

Corona for a further 43,263 people in India

9.9.2021

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 43,263 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 40,567 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 04 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.93 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 338 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,41,749 ஆனது.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.48 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.19 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 9) காலை 8 மணி நிலவரப்படி 71.65 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 86,51,701 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.