டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
1 min read
6 arrested including 2 terrorists in Delhi
14.9.2021-
பல்வேறு முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 6 பேரை டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்தனர்.
நாசவேலை
இது குறித்து டெல்லி சிறப்பு போலீஸ் உயரதிகாரி பிரமோத் குஷ்வாகா கூறியதாவது:- டெல்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவி பல்வேறு நாசவேலையில் ஈடுபட சதி தீ்ட்டியுள்ளதாக கிடத்த ரகசிய தகவலையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒசமா, முகமது அலி ஷேக், முகமது அபுபக்கர், ஷீஷன் குவாமர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 2 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் முக்கிய நகரங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் பயங்கர சதி திட்டத்தை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர்.