பஞ்சாப் மாநில புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு
1 min read
Saranjit Singh Sunny elected new Chief Minister of Punjab
19.9.201
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பஞ்சாப் முதல் மந்திரி
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு வேப்பங்காயாக கசந்தது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல் மந்திரியாக சரண் ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.