June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா; 309 பேர் பலி

1 min read

Corona for 30,773 people in India; 309 killed

19/9/2021

இந்தியாவில் மேலும் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 309 பேர் பலியானார்கள்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2வது அலையின் தீவிரம் சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163 ஆக உயர்ந்து உள்ளது. 38,945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 167 ஆக உயர்வடைந்து உள்ளது.

309 பேர் சாவு

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 309 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 838 ஆக உயர்வடைந்து உள்ளது. 3 லட்சத்து 32 ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 85,42,732 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் என இதுவரை 80 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 331 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *