June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரு நாளில் 26,041 பேருக்கு கொரோனா; 276 பேர் சாவு

1 min read

Corona for 26,041 people a day in India; 276 deaths

27.9.2021

இந்தியாவில் ஒரு நாளில் 26,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரேநாளில் 276 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,3 கோடியே, 36 லட்சத்து, 78 ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது.

276 பேர் சாவு

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு 276 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 29,621 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 3 கோடியே 29 லட்சத்து, 31 ஆயிரத்து 972 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.78 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.89 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 86.01 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 38,18,362 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு

இன்று காலை 10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே, 26 லட்சத்து, 02 ஆயிரத்து, 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 லட்சத்து, 61 ஆயிரத்து, 948 பேர் பலியாகினர். 20 கோடியே, 92 லட்சத்து, 39 ஆயிரத்து, 576 பேர் மீண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.