June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தானில் தாடியை வெட்ட தடை

1 min read

Beard cutting banned in Afghanistan

27.9.2021

‘ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ, வெட்டிக் குறைக்கவோ கூடாது; சலூன்களில் மேற்கத்திய பாடல்களும் ஒலிக்க விடக் கூடாது’ என, முடி திருத்துவோருக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்த தலிபான்கள், தற்போது பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்ததோடு, பெண் குழந்தைகளுக்கு கல்வியையும் மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கூட்டத்தில், ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை வெட்டி குறைக்கவும் கூடாது என, அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *