May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வருமுன் காப்போம் திட்ட முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min read

MK Stalin started the Let’s Protect project camp before coming

29.9.2021
வருமுன் காப்போம் திட்ட முகாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சேலம் சென்றார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வருமுன் காப்போம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

வரும்முன் காப்போம்

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. 2,530 பயனாளிகளுக்கு ரூ.24.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைந்த ஊராட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

இதையடுத்து ஆத்தூர் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு நடைபெறும் விழாவில் மாவட்டத்தில் ரூ.76 கோடியே 48 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து சேகோசர்வ் அதிகாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார். மாலையில் கருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் அவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை குறித்து அவர் கேட்டறிந்து ஆலோசனை நடத்துகிறார்.

ஆய்வு

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.