கண்ணாயிரத்தை ஏங்க வைத்த வாழைப்பழம்/ சிறுகதை
1 min readKananayiram with banana / Story by Thabasukumar
2/10/2021
கண்ணாயிரம் இரவு சாப்பிடாமல் படுத்துவிட்டார் காலை ஆறு மணிக்கு எழுந்துவிட்டார். அவர் மனைவி பூங்கொடியும் எழுந்துவிட்டார். கண்ணாயிரத்தை பார்த்து பாத் ரூமுக்கு போயிட்டு வாங்க புதுசா பேஸ்ட்பிரஸ் எல்லாம் இருக்கு பல் விளக்கிட்டுவாங்க என்று அவசரப்படுத்தினார்.
கண்ணாயிரம் கொட்டாவி விட்டபடி ம்… இன்னும் ஒரு அரைமணிநேரம் தூங்கிக்கிறேன் என்றார். அவர் மனைவி விடவில்லை. நீங்க வாக்கிங் போகணும் சீக்கிரம் பாத்ரூமுக்குபோயிட்டுவாங்க என்றார்.
கண்ணாயிரம் கண்ணைக் கசக்கியபடி எழுந்து பாத்ரூமுக்கு போனார். தூக்ககலக்கத்தில் டூத் பேஸ்டுக்குப் பதில் சேவிங்கிரிமை எடுத்து பிரஷ்சில் தடவி விட்டு புதுசுபுதுசா டூத் பேஸ்டுகண்டுபிடிக்காங்க என்று கூறியபடி பல்துலக்கதொடங்கினார். இனிப்பதற்கு பதில் சோப்பு நுரை போல் கசந்ததால் கண்ணாயிரம் எரிச்சலானார்.
பூங்கொடி… என்ன டூத் பேஸ்டு வாங்கி இருக்கிற இனிக்கிறதுக்கு பதில் கசக்குது. எந்த கடையில் வாங்குன. முதலில் கொண்டுபோய்குடுத்துடு என்று கத்தினார்.
பூங்கொடிக்கு கோபம்வந்தது. என்னங்க பார்த்துதான் வாங்கினேன். எப்படி கசக்கும் என்றபடி பாத்ரூமுக்கு சென்றார். கொண்டாங்க தூத் பேஸ்ட்பிரசை என்று கண்ணாயிரத்திடம் வாங்கினார்.
அடா இது டூத் பேஸ்ட்டு இல்லை. சேவிங்கிரிம். கண்ணுதெரியலையா. இதை போய்தேச்சிருக்கிய.. உ.. வா. அதை விழுங்கிட்டியளா? என்று அவசரமாக கேட்டார்.
கண்ணாயிரம் வேகமாக. ஆ.. கசந்துச்சா அதான் துப்பிட்டேன். நீ ஏன் டூத்பேஸ்டுக்கு பக்கத்திலே சேவிங்கிரிம் வைச்ச என்று சத்தம் போட்டார். உடனே அவர் மனைவி.. ஆவேசமாக நீங்க வாக்கிங் போயிட்டு வந்து சேவ் பண்ணட்டுமுன்னு சேவிங்கிரிம் வச்சேன். இப்படி பண்ணுவியன்னு யாருக்கு தெரியும் உங்களுக்கு கண்ணும் சரியா தெரியல கண்டெஸ்ட்பண்ணணும் என்றார்.
சேவிங்கிரிம் எடுத்து வெளியேவைத்துவிட்டு பேஸ்ட் பிரசை கண்ணாயிரத்திடம் கொடுத்து இதைவச்சு விளக்கிட்டு சீக்கிரம் வாங்க என்றார்.
அடடா ஒருநிமிசத்திலே எல்லாம் மாறிப்போச்சே என்று சொல்லி படி பல் துலக்கதொடங்கினார் கண்ணாயிரம்.
ஆ. பேஸ்ட் நல்லாருக்கு என்றபடி பல்துலக்கிவிட்டு வாய்கொப்பளித்தார். முகத்தை, காலை கழுவிவிட்டு வெளியே வந்தவர் நைட்டு சாப்பிடல காபி கொடு என்றார் மனைவியிடம். அவர் ம். காபி எல்லாம் கிடையாது. சுத்தமான தண்ணீர் வெறும்வயித்துல குடிங்க, அதுதான் நல்லது. வாக்கிங் போயிட்டு வாங்க. குளிச்சிட்டு இட்லி சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரத்துக்கு விழிபிதுங்கியது. மேசையில் வாழைப்பழம் இருந்தது. அதை பார்த்ததும் வாழைப்பழத்தை எடுத்து தோலை உரிக்க தொடங்கினார்.
அதைபார்த்ததும் அவர் மனைவி கோபமாக, ஏங்க, வெறும்வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று தடுத்தார். உடனே கண்ணாயிரம் அப்படி யார் சொன்னா. நீ வாங்கிட்டு வந்த புக்கில் அப்படி போடலையே. நான் நைட்டு நீ தூங்கிவிட்டேனே அந்தபுக்க எடுத்து படிச்சிபாத்தேன் என்றார்.
அவர்மனைவி அப்படியா. அது புக்கில் போடல, செய்தி சாரல் என்ற இணையதள சேனலில் போட்டாங்க. நான் பார்த்தேன். நீங்க வேணும்னா பாருங்க என்று செல்போனை காட்டினார்.
கண்ணாயிரம் என்னடா இது வயித்துக்கு வந்த சோதனை. நமக்கு புக்கு வழியாவும் தாக்குதல், செல்போன் வழியாகவும் தாக்குதல் என்ன செய்வேன் என்று அலுத்துக் கொண்டார். அவர் மனைவி செம்பு தண்ணீரை நீட்டினார். கண்ணாயிரம் வாங்கி மடக்கு, மடக்கு, என்று குடித்தார். பின்னர் வாக்கிங் போவதற்கு ரெடியானார்.
லுங்கி உடுத்தியபடி புறப்பட்டபோது, ஏங்க முன்னாடி லுங்கி உடுத்துட்டுபோனப்ப நாய்கடிச்சிட்டு, இப்போ அதை கழற்றிபோட்டுட்டு வேட்டியை மடிச்சிகட்டிட்டு போங்க என்றார்.
கண்ணாயிரம் உள்ளறைக்குள்சென்று லுங்கியை கழற்றிபோட்டுவிட்டு வேட்டியை மடக்கிகட்டியபடி வாக்கிங் புறப்பட்டார். அவர் மனைவி சில யோசனைகள் கூறினார். நல்லா கையை வீசி நடங்க, வியர்வை நல்லாவெளியேவரணும். பனியன் நனைஞ்சாபரவாயுல்லை என்றார்.
கண்ணாயிரம் வாசலுக்கு வந்தார். அவர் மனைவி கொஞ்சம்பொறுங்க வெளியே வேறயாரும் வாராங்களான்னுபாக்குறன். ஏழரைமணிக்கு மேல ராகுகாலம் அதுக்குள்ளவந்துடுங்க என்று சொல்லி அனுப்பினார்.
கண்ணாயிரம் தெருவில் கைகளை வீசியபடி வேகமாக நடந்தார். அவர் போலீஸ்காரங்கள் மார்ச் பாஸ் செய்ற மாதிரி நடந்ததை அந்தப் பகுதி பெண்கள் வேடிக்கை பார்த்தனர். கண்ணாயிரத்துக்கு என்ன ஆச்சின்ன அவங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். இதை எல்லாம் கண்ணாயிரம் கண்டுகொள்ளவில்லை.
சிறிது தூரம் சென்றபோது ஏற்கனவே கடித்த நாயுடன் துபாய்காரர் வாக்கிங் போய் கொண்டிருந்தார். ஆ. ஆபத்துடா. கண்ணாயிரம்.. உஷார். என்று மனம் எச்சரித்தது. கண்ணாயிரத்துக்கு வாக்கிங் போகாமலே வியர்த்தது. அப்படியே ஒரு மரத்துக்கு அடியில்போய் ஒதுங்கிநின்றார்.
-வே. தபசுகுமார், புதுச்சேரி