May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

காலனி பகுதியில் பிரியங்கா துடப்பத்தால் சுத்தம் செய்தார்

1 min read

The colony area was cleaned by Priyanka Tudap

9.10.2021

உத்தரப் பிரதேசம் லக்னோவில் தலித்துகள் அதிகம் வாழும் பகுதிக்கு திடீரென சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, துடைப்பம் எடுத்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார்.

யோகி ஆதித்யநாத் விமர்சனம்

முன்னதாக, சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனை, உத்தரப் பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து இருந்தார்.”மக்கள் அவர்களை (காங்கிரஸ் தலைவர்கள்) இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்வது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை” என கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில், “சனிக்கிழமையன்று, வால்மீகி கோவில்களில் சுத்தம் செய்யும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்” என பதிவிட்டிருந்தார்.

இன்று தலித்துகள் வசிக்கு காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “லவ் குஷ் நகரில் மக்களுடன் மக்களாக சேர்ந்து மகரிஷி வால்மீகி கோவிலை பிரியங்கா சுத்தம் செய்தார். நாட்டில் கோடிக்கணக்கான மக்களும் தூய்மை பணியாளர்களும் துடைப்பத்தை எடுத்துதான் சுத்தம் செய்கின்றனர் என பிரியங்கா குறிப்பிட்டார். பின்னர், கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார்” என்றார்.

பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, “இப்படி விமரிசித்து அவர் (யோகி) என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப்படுத்தியுள்ளார்.

உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்” என கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.