10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது
1 min read
Classes 10,11,12 do not have current quarterly and half yearly examinations
12/10/2021
10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.