தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா; 18 பேர் சாவு
1 min read
Corona for 1,289 people in Tamil Nadu today; 18 deaths
12.10.2021
தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 18 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை இன்று மாலைவெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 15,842 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு நாளில் 1,37,548 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,421 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.
18 பேர் சாவு
ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,814 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.