கால்நடைகளுக்கு சாக்லெட் தயாரிப்பு
1 min read
Chocolate preparation for cattle
16.10.2021
கால்நடைகளுக்கு தீவனத்திற்குப்பதில் சாக்லெட் கொடுத்தாலே அதிக பால் சுரக்கும் என்பதை மத்திய பிரதேச பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ளது.
சாக்லெட்
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை மையமாக கொண்ட கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், பல்வகை வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட சாக்லெட்டை உருவாக்கியுள்ளது. தீவனம், கால்நடைகள் மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாற்றாக இந்த சாக்லெட்டை பயன்படுத்தலாம்.
இந்த சாக்லெட் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், கால்நடைகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உதவியுடன் விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.