June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

காங். தலைவர் தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்- காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

1 min read

Cong. The election of the chairman will take place in September next year- the decision of the working committee meeting

16/10/2021-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி ராஜினாமா செய்தபின்னர், தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பு ஏற்றார். ஆனால் அதன்பின் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவில்லை.
இதனை காங்கிரஸ் கட்சியில் உள்ள கபில்சிபல் உள்பட பல தலைவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் மீது கட்சித் தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர்.

காரிய கமிட்டி கூட்டம்

இந்தநிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு தலைவர் தேர்ந்து எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றயை கூட்டத்தில் அப்படி தலைவர் தேர்ந்து எடுக்கப்படவில்லை.

இந்தக் கூட்டதிற்கு கட்சியின் தற்காலிய தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் லோக்சபா எம்.பி., ராகுல், பிரியங்கா, அம்பிகாசோனி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், பூபேஸ் பாகேல் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், புதிய தலைவர், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள், உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

முழுநேர தலைவர்

அதன்பின் சோனியா காந்தி பேசும்போது, “கடந்த 2019 முதல் கட்சியின் இடைக்கால தலைவராக பணியாற்றி வருகிறேன். முழுநேர தலைவரை நியமிப்பதற்கான காலக்கெடுவானது, கொரோனா 2வது அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. நான் தான் காங்கிரசின் முழு நேர தலைவர் என்பதை சொல்வேன். வெளிப்படைத்தன்மையுடன் பேசுபவர்களை எப்போதும் நான் பாராட்டுவேன். என்னுடன் யாரும் மீடியா வழியாக பேச வேண்டியதில்லை. எனவே நாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விவாதம் நடத்தலாம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவை மட்டும் வெளியே சொல்வோம்.” என்றார்.

இதனிடையே, இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், ‛‛ சோனியா மீது முழு நம்பிக்கைஉள்ளது. அவரது தலைமை பதவி குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை ” எனக்கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *