June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து

1 min read

Air Force training plane crashes in Madhya Pradesh

20.10.2021

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் நேற்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பினார்.

விமான விபத்து

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் விமானி தப்பினார்.

இதுகுறித்து இந்திய விமானப்படை டுவிட்டரில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் இன்று காலை பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.