கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு குடோனில் தீ ; 4 பேர் உடல் கருகி பலி
1 min read
Fire at firecracker godown near Kallakurichi; 4 people were burnt to death
26.10.2021
கள்ளக்குறிச்சி அருகே மின்கசிவால் பட்டாசு குடோன் தீ பிடித்துஎரிந்ததில்,அருகிலிருந்த 4 கடைகள் தரைமட்டமானது. விபத்தில் 4 பேர் பலியாகினர்.
பட்டாசு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். தீபாவளிபண்டிகையினையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுக்களை வரவழைத்து, கடையின்பின்புறம் உள்ள குடோனில் சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் மின்கசிவு காரணமாக நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டாசு குடோன் தீபிடித்து எரிய தொடங்கியது.
உடன் அங்கு இருந்த பட்டாசுக்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதன் அருகில் இருந்த அய்யங்கார் பேக்கரி, மம்மிடாடி ரெடிமேட்ஸ் கடைகளிலும் தீபரவியது. இதில் பேக்கரியில் இருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால், கடைகள் இடிந்து தரைமட்டமானது.இவ்விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் அய்யப்பன், கள்ளக்குறிச்சிமற்றும் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குசென்று தீயிணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் தடைபட்டதாலும்,சிலிண்டர்கள் வெடித்ததாலும் தீயிணை உடனடியாக அணைக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியாகினர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக், ஆர்.டி.ஓ., சரவணன் (பொ), தாசில்தார் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுவரை பட்டாசு விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை