இந்தியாவில் மேலும் 14,348 பேருக்கு கொரோனா; 805 பேர் பலி
1 min readCorona for another 14,348 in India; 805 killed
29/10/2021
இந்தியாவில் ஒரே நாளில் 14,348 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற இந்த தருணத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மறுபடியும் ஏற்றம் காணத்தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை 13,451, வியாழக்கிழமை 16,156 என பதிவான நிலையில் இன்று 14,348 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,31,809 லிருந்து 3,42,46,157 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13,198 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,14,434 லிருந்து 3,36,27,632 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,61,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
805 பேர் சாவு
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 805 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,56,386 லிருந்து 4,57,191 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20 சதவீதம், உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 104,82 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 74,33,392 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,73,08,581 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்களை இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.